Advertisment

ரஷீத்கான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்! - வியந்து பாராட்டிய சேவாக்

Rashid

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இளம் கிரிக்கெட் வீரர் ரஷீத்கானின் கிரிக்கெட் திறமையை உலகமே வியந்து கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் என்ற பின்தங்கிய நாட்டில் இருந்து வந்து, உலகையே தன் பவுலிங்கால் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இந்த முறை பேட்டிங்கிலும் தான் ஒரு கில்லி என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

Advertisment

துபாயில் நடைபெற்று வரும் டி10 லீக் போட்டியில், மராத்தா அரேபியன்ஸ் மற்றும் பக்தூன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணியின் சார்பில் பேட்டிங் செய்த ரஷீத்கான், பக்தூன்ஸ் அணியின் இர்ஃபான் வீசிய பந்தை மிட் விக்கெட் திசையில் பறக்கவிட்டார். ரஷீத்தின் பேட்டிலிருந்து தெறித்துப் பறந்த பந்து, மைதானத்தை விட்டு வெளியேறியது. இதைக் கண்ட சகவீரர்கள் அசந்துபோக, இந்திய கிரிக்கெட் வீரரும் மராத்தா அரேபியன்ஸ் அணியின் கேப்டனுமான விரேந்தர் சேவாக் எழுந்துநின்று பாராட்டினார்.

பலரும் இதைப் புகழ்ந்து பாராட்ட, ரஷீத்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டதோடு, அதைக் கண்டுபிடித்த மகேந்திர சிங் தோனியின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். என்னதான் இருந்தாலும் இந்தப் போட்டியில் பக்தூன்ஸ் அணியே வெற்றிபெற்றது. தற்போதைய நிலையில் புள்ளிப்பட்டியலில் அந்த அணியே முதலிடத்தில் உள்ளது.

sports Sehwag MS Dhoni Rashid khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe