Advertisment

'என்னுடன் ஒரே ஒரு முறை பேசுங்கள்'; தந்தை குறித்து கிரிக்கெட் வீரர் உருக்கம்

dfsg

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் லெக் ஸ்பின்னர் ரஷித் கானின் தந்தை நேற்று காலமானார். சர்வதேச ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள், ஐபிஎல், பிக் பாஷ், பாகிஸ்தான் லீக், வங்கதேச லீக் என அனைத்திலும் ரஷித் கான் தனது பந்துவீச்சில் முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பாஷ் லீக் தொடரில் விளையாடிவருகிறார். தனது தந்தையின் இறப்பு குறித்து ரஷீத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisment

அதில், 'இன்று நான் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு மனிதரை இழந்துவிட்டேன். என் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய என் தந்தை இனி இல்லை. நான் மனவலிமையாக இருக்க வேண்டும் என என் தந்தை எப்போதும் என்னிடம் கேட்பது ஏன் எனத் தெரிந்துவிட்டது. இன்று உங்கள் இழப்பை நான் தாங்கிக்கொள்ள எனக்கு மனவலிமை அவசியம் தேவை. நான் உங்களை தேடுகிறேன்' என கூறி, என்னிடம் ஒரேயொரு முறை பேசுங்கள் என ஹாஷ்டாகை பதிவிட்டுள்ளார். அவரின் தந்தை இறப்பிற்கு உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்த வருகின்றனர்.

Advertisment

cricket Rashid khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe