Advertisment

இறந்த தாயார் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசிய ரஷீத் கான்!

Rashid Khan

டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருதினை வென்ற ரஷீத் கான் இறந்த தன் தாயார் குறித்து உணர்வுப்பூர்வமாகபேசியுள்ளார்.

Advertisment

13-வது ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவரின் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களைக் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக பெர்ஸ்டோவ் 48 பந்துகளில் 53 ரன்களும், கேப்டன் டேவிட் வார்னர் 33 பந்துகளில் 45 ரன்களும் குவித்தனர்.

Advertisment

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் முன்னணி வீரர்கள் ரஷீத் கானின் சுழலில் சிக்கினர். 20 ஓவரின் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களைக் குவித்தது. இதனால், ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்கு ஓவர்கள் பந்துவீசி, 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரஷீத் கானிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆட்டநாயகன் விருது பெற்றுவிட்டு ரஷீத் கான் பேசுகையில், "கடந்த ஒன்றரை வருடம் எனக்கு கடினமான காலமாக அமைந்தது. முதலில் என் அப்பா இறந்தார். அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் என் அம்மா இறந்துவிட்டார். இதிலிருந்து மீண்டு வருவதற்கு சற்று காலம் எடுத்தது. என்னுடைய அம்மாதான் எனது தீவிர ரசிகை. குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் சொல்லலாம். நான் ஆட்டநாயகன் விருது வென்றால், அன்று இரவெல்லாம் அது குறித்து என்னிடம் பேசுவார்" எனக்கூறி உணர்ச்சிவயப்பட்டார்.

Rashid khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe