ஒரு ரன் கூட எடுக்காமல் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து படுதோல்வியடைந்த அணி...

jnmb

இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி டிராபி பி- பிரிவு ஆட்டத்தில் ஆந்திர அணிக்கு எதிராக மத்திய பிரதேச அணி ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 132 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. அதன்பின் ஆடிய மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 41 ரன்கள் முன்னிலை என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆந்திர அணி 301 ரன்கள் எடுத்து 343 ரன்களை வெற்றி இலக்காக மத்திய பிரதேச அணிக்கு நிர்ணயித்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய மத்திய பிரதேச அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில் அடுத்த 6 விக்கெட்டுகளை அந்த அணி ஒரு ரன் கூட சேர்க்காமல் இழந்தது. ஒரு வீரர் காயம் காரணமாக வெளியேறினார். இதையடுத்து 35 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ம.பி அணி 54 ஓவர்கள் மட்டுமே விளையாடியது குறிப்பிடத்தக்கது.

cricket ranji trophy
இதையும் படியுங்கள்
Subscribe