rajivgandhi khel ratna awardees 2020

Advertisment

இந்த ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது ஐந்து இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது யார்யாருக்கு வழங்கப்படுகிறது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, பாரா-தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் மற்றும் ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகிய ஐந்து பேருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.