/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dhoni-raina-final.jpg)
ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்ததற்காக தோனிக்கு சென்னை அணியின் நட்சத்திர வீரரான ரெய்னா வாழ்த்துதெரிவித்துள்ளார்.
13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் விளையாடியதன் மூலம் சென்னை அணியின் கேப்டனான தோனி ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தன் வசப்படுத்தியுள்ளார். இந்த சாதனையானது இதற்கு முன்பு ரெய்னாவின் வசம் இருந்தது. தோனி இதுவரை மொத்தமாக 194 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில், ரெய்னா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக தோனிக்கு வாழ்த்துதெரிவித்துள்ளார்.
அதில் அவர், "ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்ததற்கு வாழ்த்துகள் தோனி. என்னுடைய சாதனை உங்களால் முறியடிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இந்த வருடம் சென்னை அணி கோப்பையை வெல்லும்என்று உறுதியாக நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)