Skip to main content

‘போர் கண்ட சிங்கம்’ ரஹானே; ஷர்துலை பின் தள்ளி நம்பர் 1; சென்னை அபாரம்

Published on 23/04/2023 | Edited on 24/04/2023

 

Rahane, a 'lion who has seen war'; No. 1 behind Shardul; Chennai is great

 

நடப்பு ஐபிஎல் சீசனின் 33 ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

முதலில் களமிறங்கிய சென்னை அணியில் அனைத்து பேட்டர்களும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். ருதுராஜ் 20 பந்துகளில் 35 ரன்களை விளாச கான்வே 56 ரன்களை அடித்தார். பின் இணைந்த ரஹானே ஷிவம் துபே ஜோடி கொல்கத்தா அணியின் பந்துகளை மைதானத்தில் சிதறடித்தனர். சிக்ஸர் மழைகளை பொழிந்த இந்த ஜோடியில் ரஹானே 29 பந்துகளுக்கு 71 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் துபே 21 பந்துகளுக்கு 50 ரன்களும் ஜடேஜா 8 பந்துகளுக்கு 18 ரன்களும் குவித்தனர்.

 

236 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெகதீசன் 1 ரன்னிலும், சுனில் நரைன் ரன் எடுக்காமலும் வெளியேறினர். பின் வந்த நிதிஷ் ராணா, வெங்கடெஷ் ஐயர் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் ஜேசன் ராய் மற்றும் ரின்கு சிங் அதிரடி காட்டினர். ஆனால், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்களை இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 61 ரன்களையும் ரின்கு சிங் 53 ரன்களையும் எடுத்திருந்தனர்.

 

சிறப்பாக பந்துவீசிய சென்னை அணியில்  தேஷ்பாண்டே, தீக்‌ஷனா தலா 2 விக்கெட்களையும் மொயின் அலி, ஜடேஜா, பதிரானா, ஆகாஷ் சிங் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ரஹானே தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் கான்வே 50 ரன்களை அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக 4 முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற வரிசையில் 9வது வீரராக இணைந்துள்ளார். இதில் ஷேவாக், பட்லர், வார்னர் ஆகியோர் தொடர்ச்சியாக 5 முறை 50 அல்லது 50+ ரன்களை அடித்த வீரர்களாக உள்ளனர். 

 

இந்த போட்டியில் ரஹானே 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னை அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை மொயின் அலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்த போட்டியில் 29 பந்துகளில் 71 ரன்களைக் குவித்து 244 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய ரஹானே நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்ரேட் கொண்டவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 199.04 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தில் ரஹானே நீடிக்க 198.03 உடன் ஷர்துல் தாக்கூர் இரண்டாமிடத்தில் நீடிக்கிறார். மொத்தமாக சென்னை அணி தனது இன்னிங்ஸில் 18 சிக்ஸர்களைப் பறக்கவிட்டுள்ளது. பவர்ப்ளேவில் அதிக விக்கெட்களை பறிகொடுத்த அணிகள் பட்டியலில் கொல்கத்தா அணி 17 விக்கெட்களை இழந்து முதலிடத்தில் உள்ளது. 

 

 

 

Next Story

நீ கொடுத்ததை திருப்பிக் கொடுத்தேன்; பதிலடி தந்த சி.எஸ்.கே!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
csk vs srh csk beats sun risers hyderabad

ஐபிஎல்2024 இன் 46ஆவது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கம்மின்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு பவர் பிளேயிலேயே முதல் விக்கெட் விழுந்தது. ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழக்க, 3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் களமிறங்கினார். கடந்த ஆட்டத்தைப் போலவே பொறுப்புடனும் அதே நேரத்தில் அதிரடியும் காட்டிய ருதுராஜ் அரைசதம் கடந்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சிக்சர்களின் நாயகன் சிவம் துபே வழக்கம் போல அதிரடியாக சிக்சர்களை பறக்க விட ஆரம்பித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். சிவம் துபே 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் பந்துவீச்சில் புவனேஷ்வர், நடராஜன், உனாத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

கடந்த சில ஆட்டங்களாக 200 ரன்கள் எளிதில் எடுக்கப்படுவதும், சன் ரைசர்ஸ் அணி இருக்கும் ஃபார்மிற்கு இந்த ஸ்கோர் போதுமா ரன ரசிகர்கள் நினைத்தாலும், கடந்த ஆட்டத்தில் 206 ரன்களை சன் ரைசர்ஸ் எடுக்க முடியாமல் பெங்களூரு அணியிடம் தோற்றதாலும், சொந்த மைதானம் என்ற நம்பிக்கையிலும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் தன்னம்பிக்கையுடன் களமிறங்கினார். அந்த நம்பிக்கையை சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் வீணாக்கவில்லை.

சன் ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 32, கிளாசென் 20, சமத் 19 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

குறிப்பாக கடந்த ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஷர்துல், தேஷ்பாண்டே, முஸ்டபிசுர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். மிகவும் சிறப்பாக பந்து வீசிய தேஷ்பாண்டே 27 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளும், பதிரனா, முஸ்டபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, ஷர்துல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 98 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்த ருதுராஜ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

Next Story

பவுலர்களைக் காப்பாற்றுங்கள்; கதறிய பந்து வீச்சாளர்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

Save the bowlers; famous spinner reacts

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. 261 ரன்கள் சேஸ் செய்யப்பட்ட நேற்றைய ஆட்டம் ஒரு பேட்டிங் ட்ரீட் என்றால் அது மிகையாகாது. ஆனால் பந்து வீச்சாளர்களின் நிலைதான் மிகவும் பரிதாபாகரமாக அமைந்தது. தற்போது பந்து வீச்சாளர் ஒருவர் நேற்றைய போட்டி பற்றி தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி நரைன், சால்ட் அதிரடியால் முதல் 10 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது.

இருவரும் அரைசதம் கடந்தனர். நரைன் 71, சால்ட் 75 என சிறிய இடைவெளியில் இருவரும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 39 (23), ரசல் 24(12), ஸ்ரேயாஸ் ஐயர் 28(10) என அவர்கள் பங்குக்கு சில சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்க விட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. 

பின்னர் 262 ரன்கள் எனும் வரலாற்று இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங் இருவரும் இணைந்து பந்து வீச்சாளர்களை பதம் பார்த்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். பிரப்சிம்ரன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 108 என மிரட்ட, சஷாங்க் சிங் ஈடன் கார்டன் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் அட்டகாசமான பேட்டிங்கால் பந்துகளை சிக்சர்களாக மாற்றி 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே 262 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். 

இப்படி அதிக ஸ்கோர்கள் தொடர்ந்து அடிக்கப்படுவதும், அவை எளிதில் சேஸ் செய்யப்படுவதும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் முற்றிலுமாக பேட்ஸ்மேன்கள் விளையாட்டாக மாறி வருகிறதென்றும், இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இப்படி பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்படும் பிட்சுகள் இப்போதைய கொண்டாட்டத்துக்கு வேண்டுமானால் உதவுமென்றும், இது இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடர்களில் வெல்ல உதவாது என்றும் பலரும் விமர்சித்து வந்தனர். தற்போது இந்திய பந்துவீச்சாளர் ஒருவரே அதுபற்றி வாய் திறந்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Save the bowlers; famous spinner reacts

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூத்த வீரருமான அஸ்வின் தற்போது இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளப்பக்கமான எக்ஸ்-ல் “தயவுசெய்து யாராவது பந்து வீச்சாளர்களைக் காப்பாற்றுங்கள் “ என்றும், “ 260+ சேசிங்கில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் போதும் என்ற நிலை. இது மூழ்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவின் கீழ் ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.