rahane

Advertisment

இந்தியா - ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட்தொடர், வரும் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி, இந்தியதுணை கேப்டன்ரஹானே, கிரிக்கெட்இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.

ரஹானேஅப்பேட்டியில், "இந்தியாவின் மூத்த பந்து வீச்சாளரான இஷாந்த்சர்மாவை, இந்தத் தொடரில் நாங்கள் மிஸ்செய்வோம். ஆனாலும், எங்களிடம் வலுவான பந்து வீச்சு படை உள்ளது. பும்ரா, ஷமியோடு, உமேஷ்யாதவ், சிராஜ், சைனிஆகியோர்இருக்கிறார்கள். அவர்கள் அனுபவம் மிக்கவர்கள் மட்டுமின்றி, இங்கிருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு பந்து வீசத் தெரிந்தவர்கள். கூட்டணியாகப் பந்து வீசவேண்டியது அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "ஒரு பேட்ஸ்மேனாகவும், பந்து வீச்சாளராகவும் அஸ்வினின் பங்கு முக்கியமானதாக இருக்கும். அவர் அனுபவம் மிக்கவர். அவருக்கு இது நல்ல தொடராக அமையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.