Skip to main content

20-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற நடால்!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

Rafael Nadal

 

20-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, ரோஜர் ஃபெடரரின் சாதனையை நடால் சமன் செய்துள்ளார்.

 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச்சும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடாலும் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நடால், போட்டியின் முடிவில் மூன்று செட்டுகளை 6-0, 6-2, 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இது ரஃபெல் நடால் வென்ற 13-வது பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டம் ஆகும். அவர் வென்றுள்ள மொத்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையை ரஃபெல் நடால் சமன் செய்துள்ளார்.

 

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக், அமெரிக்காவைச் சேர்ந்த சோஃபியா கெனினை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.

 

 

 

Next Story

தன் சாதனையை சமன் செய்த நடாலை வாழ்த்திய ரோஜர் ஃபெடரர்!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

Roger Federer

 

 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடாலும் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நடால், போட்டியின் முடிவில் மூன்று செட்டுகளை 6-0, 6-2, 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். ரஃபெல் நடால் வென்றுள்ள மொத்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற ரோஜர் ஃபெடரரின் சாதனை ரஃபெல் நடாலால் சமன் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஜர் ஃபெடரர், நடாலுக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் அவர், "நடால் மீது தனிநபராகவும், சாம்பியனாகவும் மிகுந்த மரியாதை எனக்கு உண்டு. நீண்ட காலமாக எனது போட்டியாளர். எங்கள் இருவருக்கும் இடையேயான இந்த போட்டிதான் சிறந்த வீரராக எங்கள் இருவரையும் மாற்றியிருக்கிறது. 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதற்காக அவரைப் பாராட்டுவது எனக்கு மிகப்பெரிய மரியாதை. 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது தொடரும் எங்கள் பயணத்தின் கூடுதலான ஒரு அடி என்று நம்புகிறேன். வாழ்த்துகள் நடால். நீங்கள் இதற்கு தகுதியானவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

ஆஸ்திரேலியா ஓபன்; நடாலை வென்று வரலாறு படைத்த ஜோகோவிச்...

Published on 27/01/2019 | Edited on 27/01/2019

 

hgnfgnf

 

டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் பரபரப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் செர்பிய வீரரான ஜோகோவிச் ஸ்பெயின் வீரர் நடாலை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த ஜோகோவிச்  6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தினார். இதன் மூலம் 7-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் செர்பியாவின் ஜோகோவிச். இதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக முறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைத்துள்ளார்.