pv sindhu

டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.மேலும்பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64-69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Advertisment

இதைத்தவிர இந்தியா இதுவரை எந்த பதக்கத்தையும் வெல்லவில்லை. இந்தநிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மின்டனில், இந்தியாவின் பி.வி சிந்து, சீன தைபேயின்தை சூ-யிங்கைஎதிர்க்கொண்டார். இதில் முதல் செட்டை வெல்ல இருவரும் கடுமையாக மோதினர். இறுதியில் முதல் செட்டைதை சூ-யிங் 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்பிறகு இரண்டாவது சுற்றை தை சூ-யிங் 21 -12 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார்.

Advertisment

இந்த போட்டியில் தோல்வியடைந்தசிந்து வெண்கல பதக்கத்திற்காகஹிபிங் ஜியாவோவுடன்நாளை மோதவிருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பாக தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர்களுள்சிந்துவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.