jkl

Advertisment

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 07.30 மணிக்கு தொடங்கியது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது.

பின்னர், 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. இறுதி நேரத்தில் கடைசி 6 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் தோனி தனது அதிரடி ஆட்டத்தை காட்ட முற்பட்டார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக அவுட் ஆகவே,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் தொடர்கிறது.