Skip to main content

முதல் வெற்றி; டெல்லியை பதம் பார்த்த பஞ்சாப் கிங்ஸ்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Punjab Kings recorded their first win after defeating Delhi

ஐபிஎல் 17வது சீசனின் இரண்டாவது போட்டி டெல்லி கேபிட்டல் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மகாராஜா யாதவந்திர சிங் மைதானத்தில் சண்டிகரில் இன்று மாலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேபிட்டல் அணிக்கு வார்னர் மார்ஸ் இணை ஓரளவு நல்ல துவக்கம் தந்தது. வார்னர் 29 ரன்களும் மார்ஸ் 20 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த சாய் ஹோப் அதிரடியாக விளையாடி 25 பந்துகளின் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் களம் இறங்கிய ரிஷப் பண்ட் 13 பந்துகளின் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த புய் , ஸ்டப்ஸ் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.  இறுதி கட்டத்தில் அக்சர் படேல் அதிரடியாக 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் திருப்புமுனையாக கடைசி கட்ட வீரர் அபிஷேக் பொரேல் 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அக்சர்  படேலின் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் என 24 ரன்கள் குவித்தார். 

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174  ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஸ்திப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். ரபாடா, ஹர்பிரித், ராகுல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்பு களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் தவான் பேர்ஸ்டோ இணை ஓரளவு நல்ல துவக்கம் தந்தது. இருப்பினும் அடுத்தடுத்து இருவரும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷாம் கரண் இணை ஓரளவு அதிரடி காட்டி ஆடியது. பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 9 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் சாம் காரனுடன் லிவிங்ஸ்டன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷாம் கரண் அரை சதம் கடந்து 63 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சஷாந்த் சிங் டக் அவுட் ஆனாலும், லிவிங்ஸ்டன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று 38 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்தார். 19.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.

- வெ.அருண்குமார்

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

நிராகரிப்பின் வலி;பஞ்சாப்பை நிமிரச் செய்த சஷாங்க் சிங்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The pain of rejection; Shashank Singh who gives victory for Punjab!

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நவம்பர் மாத மழை என்பது எப்படி உறுதியோ அதுபோல நரைனின் அதிரடி உறுதி என சிறப்பாக ஆரம்பித்தார் சுனில் நரைன். அவருடன் இணைந்து சால்ட்டும் சகட்டுமேனிக்கு சிக்சர்களை பறக்கவிட கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது.

The pain of rejection; Shashank Singh who gives victory for Punjab!

சால்ட், பேர்ஸ்டோ என இருவரும் அரைசதம் கடந்தனர். நரைன் 71, சால்ட் 75 என சிறிய இடைவெளியில் இருவரும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 39 (23), ரசல் 24(12), ஸ்ரேயாஸ் ஐயர் 28(10) என அவர்கள் பங்குக்கு சில சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்க விட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. அர்ஸ்தீப் 2, சாம் 1, ஹர்ஷல் 1, ராஹுல் 1 முறையே விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் 262 ரன்கள் எனும் வரலாற்று இலக்கை விரட்டியது பஞ்சாப் அணி. ஆரம்பத்தில் பேர்ஸ்டோ ஸ்ட்ரைக் செய்ய தடுமாற பிரப்சிம்ரன் சிங் சிக்சர்களை பறக்க விட்டார். பவுண்டரிகளும் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர்.பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் பேர்ஸ்டோ தன் பங்குக்கு அதிரடி காட்டி அரை சதம் கடந்தார். பின்னர் பேர்ஸ்டோவுடன் இணைந்த ரூசோ சிறிது அதிரடி காட்டி 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் சாம் கரன் இறங்காமல், இந்த சூழலை சமாளிக்க சஷாங்தான் சிறந்தவர் என முடிவெடுத்து 4ஆவது விக்கெட்டுக்கு அவரைக் களமிறக்கினார். சஷாங்க் அவரை ஏமாற்றவில்லை. இந்த ஐபிஎல்-இல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஷாங்க் சிங், ஈடன் கார்டன் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் அட்டகாசமான பேட்டிங்கால் பந்துகளை சிக்சர்களாக மாற்றி சிதறடித்தார். விக்கெட் விழ சிறு வாய்ப்பு கூட தராமல் அதிரடியாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் ஆடி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும் அடங்கும்.

The pain of rejection; Shashank Singh who gives victory for Punjab!

அனுபவ வீரருக்கான அழகுடன் ஆடிய பேர்ஸ்டோ ஐபிஎல்-இல் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே 262 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் ஒரு அணியால் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். இதன் மூலம் 6 புள்ளிகள் பெற்று 8 ஆவது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் ரேசில் நாங்களும் உள்ளோம் என்று மற்ற அணிகளுக்கு தெரிவித்துள்ளது. சதமடித்த பேர்ஸ்டோ ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.