அங்கேயே நடக்கும்போது இங்க மட்டும் என்ன? - ஐ.பி.எல் போட்டி தொடர்பாக கடிதம் எழுதிய முதல்வர்!

AMARINDER SINGH

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் (சில ஆண்டுகளைத் தவிர்த்து) இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் கரோனாபரவலின் காரணமாக வெளிநாட்டில் நடந்த இத்தொடர் இந்தாண்டுஇந்தியாவில் ஏப்ரல் 9 ஆம்தேதி தொடங்கி, மே 30 வரை நடைபெறவுள்ளது. கரோனாஅச்சத்தால் இந்த முறை அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட 6 மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில், உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமானநரேந்திர மோடி மைதானத்தில் தான், பிளே ஃஆப்மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் மொஹாலியிலும்ஐ.பி.எல் போட்டிகளைநடத்துமாறு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அமரீந்தர் சிங், "ஒருநாளைக்குஒன்பது ஆயிரம் கரோனாதொற்றுகள் பதிவாகும் மும்பையில் உங்களால் போட்டியை நடத்த முடியுமென்றால், மொஹாலியில் ஏன் நடத்த முடியாது எனக் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்குக் கடிதம் எழுதியுள்ளேன். ஐ.பி.எல் போட்டிகளுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள்எடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

bcci captain amrinder singh ipl 2021
இதையும் படியுங்கள்
Subscribe