Pro Kabaddi Series Begins Today.. Fans Allowed After Two Seasons

12 அணிகள் மோதும் ஒன்பதாவது ப்ரோ கபடி தொடர் பெங்களூருவில் இன்று துவங்குகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தொடரை பெஙளூரு ஹைதராபாத் புனே ஆகிய மூன்று நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

போட்டிகள் நடக்கும் தேதி அணிகளின் விவரம் அடங்கிய அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் முதல் நாளான இன்று மூன்று போட்டிகள் நடை பெற உள்ளன. தமிழக அணி நாளை குஜராத்துடன் முதல் போட்டியில் விளையாட உள்ளது.

Advertisment

இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரு முறை மோத வேண்டும். லீக் போட்டிகளில் முதல் ஆறு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். லீக் போட்டிகளில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

கரோனா பேரிடர் காரணமாக 2020ம் ஆண்டு இந்த போட்டி கைவிடப்பட்டது. கடந்த ரசிகர்கள் யாரும் இன்றி நடத்தப்பட்டது. இரண்டு சீசன்களுக்கு பிறகு போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.