Skip to main content

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ப்ரித்வி ஷா... நடந்தது என்ன..?

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

prithvi shaw banned for 8 months for using banned substances

 

 

முஸ்தாக் அலி கோப்பையில் பங்கேற்ற போது, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உபயோகித்ததாக பிரித்வி ஷா மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக பலகட்ட சோதனைகளை நடத்திய மும்பை கிரிக்கெட் சங்கம் பிரித்வி ஷா ஊக்கமருந்து உட்கொண்டதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தது.

இதன் அடிப்படையில் நவம்பர் 15 ஆம் தேதி வரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பிரித்வி ஷா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ள ப்ரித்வி ஷா, என் விஷயத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் நான் மும்பை அணிக்காக விளையாடிய போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் இருமல் சிரப் எடுத்துக்கொண்டேன். அதில் தான் தடைசெய்யப்பட்ட வேதிபொரும் இருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி மருந்தை உட்கொண்டதால் தான் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறேன். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாத வண்ணம் மிகவும் கவனமுடன் செயல்படுவேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை, இந்திய அணிக்காக விளையாடுவதை தவிர எனக்கு எந்த பெருமையும் இல்லை. விரைவில் இந்த சூழலில் இருந்து மீள்வேன் என நம்பிக்கையுடன் பிரித்வி ஷா பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

பிரித்வி ஷாவை விரட்டி விரட்டி தாக்கிய இளம்பெண் (வீடியோ)

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

sapna gill attacked the cricketer prithvi shaw

 

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவை இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் விரட்டி விரட்டித்  தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக இருப்பவர் பிரித்வி ஷா. 23 வயதான இவர், கடந்த 2018 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா, ஏப்ரலில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். 

 

இந்நிலையில், பிரித்வி ஷா கடந்த புதன்கிழமையன்று மும்பை ஏர்போர்ட்டுக்கு அருகே உள்ள ஹோட்டலுக்கு தனது நண்பருடன் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது, பிரித்வி ஷாவிற்கு அருகில் வந்த ஒரு ஜோடி தாங்கள் உங்களுடைய ரசிகர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த பிரித்வி ஷா, “ச்ச.. ச்ச.. என்னோட ரசிகருன்னு வேற சொல்றிங்க.. ஒரு போட்டோ தான.. எடுத்துக்கோங்க..” என்பது போல் கூறியுள்ளார்.

 

இதை கப்பென்று பிடித்துக் கொண்ட அந்த ஜோடி, சில போட்டோக்களை எடுத்துக் கொண்டனர். ஆனால், பிரித்வி ஷாவை விடாத அந்த ஜோடி, தொடர்ந்து செல்ஃபி எடுக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் எரிச்சல் அடைந்த பிரித்வி ஷா, தன்னுடைய மேனேஜரை அழைத்து அவர்களை கட்டுப்படுத்துமாறு கூறியுள்ளார். மேலும், இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹோட்டல் நிர்வாகம், அந்த ஜோடியை ஹோட்டலை விட்டு வெளியேற்றியதாகச் சொல்லப்படுகிறது.

 

அதன் பிறகு, ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த அந்த ஜோடி, தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு,  பிரித்வி ஷா அங்கிருந்து புறப்பட்ட பின் அவரது காரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதையடுத்து, மும்பையில் சாலையில் வைத்து பிரித்வி ஷாவின் காரை மடக்கிய அந்த கும்பல், பேஸ்பால் மட்டைகளால் அவரையும், அவரது காரையும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

 

இதனிடையே, காவல்நிலையத்தில் பிரித்வி ஷா தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சப்னா கில் என்கிற பெண் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம், குற்றம் சாட்டப்பட்ட பெண் தரப்பில், பிரித்வி ஷா தான் தன்னை முதலில் தாக்கினார் என அவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.