Advertisment

நான் ஸிவாவை கடத்தலாம், ஜாக்கிரதையாக இருங்கள்: தோனியை கலாய்க்கும் பிரபல நடிகை...

நான் ஸிவாவை கடத்தலாம், ஜாக்கிரதையாக இருங்கள் என நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி சிந்தா போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

preity zinta tweet about dhoni and ziva

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அதன் பின் தோனியுடன் பேசிய ப்ரீத்தி சிந்தா அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ப்ரீத்தி சிந்தா, "கேப்டன் கூல் தோனி, நான் உட்பட பல ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த முறை எனது விஸ்வாசம் அவரது மகள் ஸிவாவிடம் மாறியுள்ளது. இந்தப் புகைப்படம் எடுக்கும்போது அவரிடம்... நான் ஸிவாவைக் கடத்தலாம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறினேன்" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

மேலும் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களையும் கேப்ஷன் வைக்க சொல்லியுள்ளார். இதனால் அவரின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ட்வீட்டிற்கு பலரும் தங்கள் கற்பனைகளை கேப்ஷனாக வைத்து வந்தாலும், அதில் சென்னை ரசிகர்கள் தான் தங்கள் கருத்துக்களை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CSK Dhoni ipl 2019
இதையும் படியுங்கள்
Subscribe