pranab mukherjee

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி நேற்று மரணமடைந்தார். அதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், தற்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் ஒருநாள் அணிக்கான துணை கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பிரணாப்முகர்ஜி அவர்களின் இறப்பு செய்தி வருத்தமளிக்கிறது. நம் தேசம் சிறந்த தலைவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இந்திய அணியின் ஒருநாள் அணிக்கான துணை கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பிரணாப்முகர்ஜி அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவர் சிறந்த தலைவர். அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" எனப் பதிவிட்டுள்ளார்

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு செய்தி கவலையளிக்கிறது. இந்தியாவிற்காக கடினமாக உழைத்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசித்தவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.