பாராலிம்பிக்ஸ்: நான்காவது தங்கத்தை வென்றது இந்தியா!

pramod bhagat

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகிறது. நேற்று (03.09.2021) மட்டும் இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றது.

இந்தநிலையில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் மணீஷ் நர்வால் தங்கம் வென்று சாதித்துள்ளார். அதே பிரிவில் சிங்ராஜ் வெள்ளி வென்று அசத்தினார். இந்தநிலையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் (எஸ் எல் 3) இந்தியாவின் பிரமோத் பகத் தங்கம் வென்றுள்ளார்.

இந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா வெல்லும் நான்காவது தங்கம் இதுவாகும். மேலும் அதே பேட்மிண்டன் (எஸ் எல் 3) போட்டியில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

manoj sarkar paralympics pramod bhagat
இதையும் படியுங்கள்
Subscribe