Advertisment

“தோனி என்றாலே இப்படித்தான்” பிரக்யான் ஓஜா கருத்து

Pragyan Ojha comments on former Indian captain Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளரானபிரக்யான் ஓஜா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisment

தோனி குறித்து அவர் பேசியதாவது, “தோனி விஷயங்களை மிகவும் எளிமையாகச் செய்வார் என்று நான் நினைக்கிறேன். அவருடன் அல்லது அவருக்கு கீழ் விளையாடிய அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களையும் நீங்கள் பார்த்தால், அவர்கள் தோனி கூறும் நுட்பங்களை ரசிக்கிறார்கள். அவர் எங்களுக்கு விஷயங்களை மிகவும் எளிதாக்கினார். ஒரு பந்துவீச்சாளராக, நீங்கள் உங்கள் சொந்த பந்துவீச்சைப் பற்றி சிந்திக்க வேண்டும், உங்கள் பீல்டிங்கைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும், நீங்கள் பேட்ஸ்மேனைப் பற்றி சிந்திக்க வேண்டும், நீங்கள் நிலைமைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால் தோனி இதில் எதாவது ஒரு பகுதியை தனது வேலையாக்கிக் கொள்வார். உதாரணமாக பீல்டிங் ப்ளேஸ்மெண்ட் அல்லது விக்கெட் எப்படி செயல்படுகிறது என்பனவற்றை அவர் கண்காணித்து சொல்லுவார்.

இவைதான் அவர் உங்களுக்கு உதவும் விஷயங்கள். அதனால்தான் ஒரு பந்துவீச்சாளரின் சுமை குறைவாக இருந்தது.அதையே நான் ரசித்தேன். பவுலர்களுக்கு அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளும் விதம் தோனியின் சிறந்த பண்பு. அவர் கேப்டனாக இருந்த காலத்தில் எனக்கும் மற்ற பந்து வீச்சாளர்களுக்கும் இது மிகவும் உதவியாக இருந்தது. ஒரு இளைஞன் விளையாடும்போது, ‘கேப்டன் கூல்’ அவன் மீது அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறார். அது உண்மையில் உங்களுக்கு உதவும் ஒன்று” என்று ஓஜா கூறினார்.

ojha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe