Advertisment

அடுத்த கில்கிறிஸ்ட் இவர்தான்; ரிக்கி பாண்டிங் புகழாரம்...

hym

Advertisment

2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த கிரிக்கெட் வீரர் என மூன்று விருதுகளை இந்திய கேப்டன் கோலி பெற்றார். மேலும் வளர்ந்துவரும் இளம் வீர்ர் என்ற விருதை இந்திய அணியின் ரிஷப் பந்த் பெற்றார். இதற்காக ரிஷப் பந்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், 'மிகுந்த திறமையுள்ள, பந்தை கணித்து அடிக்கக் கூடியவர் ரிஷப் பந்த், போட்டி எப்படி செல்லும் என்பதையும் சரியாக கணிக்கும் திறமை கொண்டவர். இந்திய கிரிக்கெட்டில் அதிகமான தாக்கங்களை ஏற்படுத்தியவர் என தோனியை அனைவரும் அடிக்கடி குறிப்பிடுவோம், ஆனால் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் 6 சதங்கள் மட்டுமே தோனி அடித்துள்ளார். ஆனால், ரிஷப் பந்த் அறிமுகமான சில போட்டிகளிலேயே 2 சதங்கள் அடித்துவிட்டார். என்னைப் பொருத்தவரை அடுத்த கில்கிறிஸ்ட் போல ரிஷப் பந்த் எனக்கு தெரிகிறார்” என புகழ்ந்துள்ளார்.

Rishab Pant ricky ponting
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe