Advertisment

“மெல்ல விடை கொடு மனமே” - ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து பொலார்ட் ஓய்வு 

Pollard retires from IPL cricket

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மும்பை இந்தியன்ஸ்வீரர் கிரன் பொலார்ட் அறிவித்துள்ளார். 2010 முதல் 13 வருடங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய கிரன் பொலார்ட் 5 முறை மும்பை அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார்.

Advertisment

ஓய்வு குறித்து பொலார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்னும் சில ஆண்டுகள் விளையாடத்தயாராக இருக்கும் சூழலில் இத்தகைய முடிவை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல. இனி மும்பை அணிக்குத்தொடர்ந்து விளையாட முடியாது என்றாலும் கூட நான் மும்பை அணிக்கு எதிராக விளையாடுபவனாக என்னையே என்னால் பார்க்க முடியாது.

Advertisment

மும்பை இந்தியன்ஸ் வீரர் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் வீரர் தான். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளேன். மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் பணியாளர்களுக்கும் மிகப் பெரிய நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

mumbaiindians
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe