‘5வது வெற்றி...’ - இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் பாராட்டு 

PM Modi congratulated India on their win against New Zealand

உலகக் கோப்பையின் 21வதுலீக்ஆட்டம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேதரம்சாலாவில்நடைபெற்றது. இதில்டாஸைவென்ற இந்திய அணியின்கேப்டன்ரோஹித்முதலில் பந்துவீச்சைதேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50ஓவர்களில்அனைத்துவிக்கெட்டுகளையும்இழந்து 273ரன்கள்எடுத்திருந்தது.

இதையடுத்து 274ரன்கள்எடுத்தால் வெற்றி என்றஇழுக்குடன்களமிறங்கிய இந்திய அணி 48ஓவர்கள்முடிவில் 274ரன்கள்எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 வெற்றிகளுடன்புள்ளிப்பட்டியலில்முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த போட்டியில் 5விக்கெட்டுகள்வீழ்த்தியஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நியூசிலாந்தை இந்தியா வெற்றிபெற்றதற்குப்பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூகவலைத்தளபதிவில், “நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றதற்கு இந்தியகிரிக்கெட்அணிக்கு வாழ்த்துக்கள். இது ஒரு அற்புதமான குழு முயற்சி, அங்கு அனைவரும் பங்களித்தனர். களத்தில் அர்ப்பணிப்பும் திறமையும் முன்மாதிரியாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

India
இதையும் படியுங்கள்
Subscribe