Advertisment

புனேவில் நடக்க இருக்கும் போட்டிகள் கொல்கத்தாவிற்கு மாற்றம்!

புனே கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவிருந்த கிரிக்கெட் போட்டிகள், கொல்கத்தா மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

pune

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அந்த அணி விளையாடும் போட்டிகள் புனேவில் உள்ள மைதானத்திற்கு மாற்றப்பட்டன. இங்கு தொடர்ந்து போட்டிகள் விளையாடப்பட்டு வரும் நிலையில், மைதானத்தின் நீர்த்தேவை குறித்த கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. புனே மைதானத்திற்கு அருகாமையில் உள்ள பாவனா நதியில் இருந்து நீர் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியநிலையில், அது மும்பை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், பாவனா நதியில் இருந்து நீர் எடுப்பதற்கு, புனே மைதான நிர்வாகத்திற்கு தடைவிதித்தது.

Advertisment

புனே மைதானத்தில் ப்ளே ஆஃப் போட்டிகளான எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் போட்டிகள் முறையே மே 23 மற்றும் மே 25ஆம் தேதிகளில் நடக்கவிருந்தன. இந்நிலையில், ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா புனேவில் நடக்கவிருக்கும் போட்டிகள் ஈடன் கார்டன் மைதானத்திற்கு மாற்றப்படும் என அறிவித்துள்ளார். இதனை கொல்கத்தா கிரிக்கெட் அசோஷியேசனும் உறுதிசெய்துள்ளது.

ipl 2018 Pune
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe