Advertisment

“வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை” - பிசிசிஐ புகார்

“Players not offerd good food properly” – BCCI complaint

8 ஆவது டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அங்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொண்டது. மெல்பார்ன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் 160 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Advertisment

முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த போட்டியில் நெதர்லாந்து அணியுடன் நாளை மோத உள்ளது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி சிட்னி சென்றுள்ளது. இந்நிலையில் சிட்னி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

Advertisment

சாண்விட்ச் மட்டுமே கொடுக்கப்பட்டதாக ஐ.சி.சியிடம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்துள்ளதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. சிட்னியில் நடந்த பயிற்சிக்கு பிறகு வீரர்களுக்கு ஆறிப்போன உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

bcci
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe