/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4652.jpg)
சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (எஃப்.ஐ.டி.இ) சார்பாக ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ ரேட்டிங் பட்டியல் வெளியிடப்படும். இந்த ரேட்டிங் பட்டியலில் கடந்த 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்த் இருந்து வந்தார். இந்நிலையில், இந்த மாதம் வெளியான எஃப்.ஐ.டி.இ. ரேட்டிங் பட்டியல் மூலம், விஸ்வநாதன் ஆனந்த்தை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக குகேஷ் இடம் பிடித்துள்ளார்.
அண்மையில் நடந்த செஸ் உலகக் கோப்பை கால் இறுதிப் போட்டியில் அவர் தோல்வி அடைந்தபோதும், குகேஷ் சர்வதேச ரேட்டிங்கில் ஏற்றம் கண்டு உலக அளவில் 8வது இடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் இவர் தற்போது 2,758 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், 2,754 புள்ளிகளுடன் விஸ்வநாதன் ஆனந்த் 9வது இடத்திலும் உள்ளனர். அதேபோல், பிரக்ஞானந்தா 19வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)