PARALYMPICS INDIA WIN ONE MORE SILVER MEDAL

Advertisment

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் 2.07 மீ. தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார் பிரவீன்குமார். பிரிட்டன் வீரர் ஜானதனுடன் கடும் போட்டி நிலவிய நிலையில், தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.

நடப்பு பாராலிம்பிக்ஸ் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா 36வது இடத்தில உள்ளது.

இதனிடையே, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி" என்று புகழாரம் சூட்டினார்.