/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4298.jpg)
பாரா ஆசியப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இந்தியா சார்பில், உயரம் தாண்டுதலில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இவருக்கு இந்தியாவின் பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்தைத் தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமூகவலைதளப் பக்கமான எக்ஸில் பாரா ஆசியப் போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்தில், “சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது அவரது திறமைக்கும் உறுதிக்கும் ஒரு சான்றாகும். இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)