Advertisment

“இந்திய அணியை வீழ்த்தினால் டேட்டிங் வர ரெடி” - பாகிஸ்தான் நடிகை 

 Pakistani actress says Ready to go on a date if beat the Indian team

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

Advertisment

இதில் கடந்த வாரம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.அந்தப்போட்டியில், பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா அணி வெற்றி பெற்றது. இதில், பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த இந்தியரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ எனத்தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பினர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், இன்று (19-10-23) நடக்கும் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில், வங்க தேசம், இந்திய அணியை வீழ்த்தினால் வங்கதேச வீரர் ஒருவருடன் இரவு விருந்து (டேட்டிங்) சாப்பிடுவதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தான் நடிகையான சேஹர் ஷின்வாரி என்பவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “இந்தப் போட்டியில் என்னுடைய வங்காளதேச சகோதரர்கள் எங்களுக்காக பழி வாங்குவார்கள். இந்தியாவை அவர்கள் வீழ்த்தினால், நான் டாக்காவுக்கு சென்று அங்கு வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இரவு விருந்துக்கான டேட்டில் (டின்னர் டேட்) கலந்து கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Bangladesh Actress pakisthan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe