Skip to main content

அரையிறுதிக்கு இதுதான் வழி; பாகிஸ்தான் காட்டிய அதிரடி!

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

Pakistan vs new zealand world cup cricket score update

 

உலகக் கோப்பையின் 35 ஆவது லீக் ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று (04-11-23) நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. 

 

இதில் அதிகபட்சமாக ரவீந்திரா 94 பந்துகளில் 15 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடித்து 108 ரன்களை குவித்தார். அதே போல், வில்லயம்சன் 79 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து 95 ரன்களை எடுத்து அவுட்டானார். இதில்  பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது வாசிம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது.

 

அதனை தொடர்ந்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபஹர் ஷமான் சதமதித்து அசத்தினார். அவர் 69 பந்துகளில் 7 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் அடித்து 106 ரன்களுடனும், பாபர் அசாம் 51 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடித்து 47 ரன்களுடனும் ஆடிய நிலையில், 21.3 ஓவருக்கு 1 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மழை நின்றதால் 6.30 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

 

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 25.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் ஆட்டத்தை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் டக்வொர்த் லூயிஸ் விதி பயன்படுத்தப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகனாக சதம் அடித்த ஷமான் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 8 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்