Advertisment

புற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...

பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

pakistan player asif ali's daughter passed away due to cancer

இங்கிலாந்தில் தற்போது நடந்துவரும் பாகிஸ்தான் இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும்இவர் வரும் உலகக்கோப்பைக்கான 11 பேர் அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 பேர் கொண்ட அணியில் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் இங்கிலாந்து தொடரில் இவரது சிறப்பான ஆட்டமா காரணமாக அணியில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவரது 2 வயது மகள் நான்காம் கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது மகள் தற்போது உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகள் நூர் பாத்திமா இறஙக தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் விரைந்துள்ளனர் ஆசிப் அலி. நூர் ஃபாத்திமாவின் மறைவுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

icc worldcup 2019 Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe