Advertisment

பாகிஸ்தான் ரசிகர்களின் பாசத்தால் திக்குமுக்காடும் இந்திய ரசிகர்கள்...

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏற்கக்குறையதனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைவது இழுபறியில் உள்ளது.

Advertisment

pakistan fans supports india for the match against england

மேலும் பாகிஸ்தான் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், இந்திய அணி தனது அடுத்தடுத்த ஆட்டங்களில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளை தோற்கடிக்க வேண்டும். இப்படி நடந்தால் மட்டும் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல முடியும். இந்த நிலையில் பல பாகிஸ்தானியர்களும் அடுத்து நடக்கும் இந்தியாவின் ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற பிரார்த்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் ரசிகர்களை வம்பிழுக்கும் விதமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் போட்ட ட்வீட் தற்போது இந்தியாவில் வைரலாகி வருகிறது. நாசர் உசேன் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியா, இங்கிலாந்து ஆட்டத்தில் நீங்கள் யாருக்கு ஆதரவு தருவீர்கள்" என பாகிஸ்தான் ரசிகர்களிடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.

Advertisment

இதற்கு அவர் சற்றும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் இந்திய அணிக்கு தான் எங்கள் ஆதரவு என பதிலளித்து வருகின்றனர். இதில் பலஇந்திய ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.

இதனை பார்த்த நாசர் மீண்டும் பதிவிட்ட ஒரு ட்வீட்டில், "எனது கேள்விக்கு நிறைய வெறுப்பும், கோபமுமே பதிலாக கிடைக்கும் என எண்ணினேன். அனால் நிறைய அன்பையும், நகைச்சுவையையும் நான் பதிலாக பெற்றேன்" என பதிலளித்துள்ளார். இந்த ட்வீட்டிற்கும் இரு நாட்டு ரசிகர்களும் அவருக்கு பதிலளித்து வருகின்றனர்.

icc worldcup 2019 Pakistan team india
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe