Advertisment

"தோனி தான் சிறந்த கேப்டன்...!" காரணம் சொல்லும் அப்ரிடி...

afridi

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி சில வாரங்களுக்கு முன்னால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அவர் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பிய அப்ரிடி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களுடன் உரையாடினார். ரசிகர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர், அப்ரிடி அவை ஒவ்வொன்றுக்கும் பொறுமையாக பதில் அளித்தார்.

Advertisment

அப்போது ரசிகர் ஒருவர் ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி இவர்களில் யார் சிறந்த கேப்டன் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அப்ரிடி தோனிதான் சிறந்த கேப்டன் என பதில் அளித்துள்ளார். ஏனென்றால் இளம் வீரர்களைக்கொண்டு வலிமையான புது அணியை அவர் தான் கட்டியெழுப்பினார் என விளக்கமும் கொடுத்துள்ளார்.

Advertisment

Dhoni Shahid Afridi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe