Advertisment

இந்தியாவிற்கெதிரான போட்டி: 12 பேர் கொண்ட அணியை அறிவித்த பாகிஸ்தான்!

INDIA VS PAKISTAN

Advertisment

2021ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பைபோட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றுமுதல் (23.10.2021) சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன. முதல் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில், ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்காஅணிகள் மோதவுள்ளன. இதனைத்தொடர்ந்து மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து -விண்டீஸ் அணிகள் மோதவுள்ளன.

நாளை நடைபெறும் ஆட்டத்தில்இந்தியாவும்பாகிஸ்தானும் மோதவுள்ளன. இந்தப் போட்டியைக் காண வழக்கம் போல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்தநிலையில், நாளைய போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

அந்த அணியில் பாபர் அஸம், முகமது ரிஸ்வான், ஃபகார் ஜமான், முகமது ஹஃபீஸ், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவூப், ஹைதர் அலி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

india vs pakistan T20 WORLD CUP 2021
இதையும் படியுங்கள்
Subscribe