Lovlina Borgohain

Advertisment

கரோனாபரவல் காரணமாக 2020 ஆம் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், ஒத்திவைக்கப்பட்டு கடந்தாண்டு நடைபெற்றது. டோக்கியோவில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக்கில்பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியா சார்பாக பங்கேற்ற அசாமின் லோவ்லினா போர்கோஹெய்ன், வெண்கல பதக்கத்தை வென்றார்.

இதன்மூலம் மேரி கோம், விஜேந்தர் சிங் ஆகியோருக்குப் பிறகு, ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையையும் லோவ்லினா படைத்தார். இந்தநிலையில்லோவ்லினா போர்கோஹெய்ன்அசாம் காவல்துறையில் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அரசாணையைஅசாம் முதல்வர்ஹிமந்தா பிஸ்வா சர்மா,லோவ்லினா போர்கோஹெய்னிடம் வழங்கியுள்ளார்.