இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிஇன்று (18.06.2021) இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் தொடங்க இருக்கிறது. ஆனல்அங்கு தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் திட்டமிட்டபடி 3 மணிக்கு (இந்திய நேரப்படி) போட்டியைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், மழை பாதிப்பு காரணமாக இன்றைய நாளின் முதல் பகுதியில் (first session) ஆட்டம் நடைபெறாதுஎன அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தை ஆய்வுசெய்தபோட்டி நடுவர்கள், முதல் செஸ்சனில்ஆட்டம் நடைபெறாது என அறிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.