நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை சேர்த்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/india11.jpg)
நியூசிலாந்து அணியில் அதிக பட்சமாக கப்தில் 33, சைபர்ட் 33, மன்ரோ 26, ராஸ் டெய்லர் 18 ரன்கள் சேர்த்தனர். அதேபோல் இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 2, பும்ரா, தூபே, ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/india13.jpg)
அதைத் தொடர்ந்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 57, ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் எடுத்தனர்.ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Follow Us