Skip to main content

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்?

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

New captain for Indian cricket team?

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்திய அணி உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியை நவம்பர் 19ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது. உலக கோப்பை முடிந்தவுடன் தொடர்ந்து இங்கேயே தங்கும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

 

உலக கோப்பைக்கு முன்னர் இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், அந்த தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார். இனி டி20 தொடர்களுக்கு ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பந்தை தடுக்க முயன்ற போது ஹர்திக் பாண்டியாவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலே வெளியேறினார். தொடர்ந்து காயம் குணமாகாத நிலையில், தொடரில் இருந்தே வெளியேறினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார்.

 

இந்நிலையில், உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் காயம் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், காயம் குணமாக இன்னும் இரண்டு மாத காலம் தேவைப்படுவதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில் டி20 அணிக்கு யார் கேப்டனாக செயல்படப் போகிறார் என  எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், துணை கேப்டனாக இருந்த சூர்யகுமார் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் மீது காவல்நிலையத்தில் புகார்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Complaint against  Mitchell Marsh at Uttar Pradesh Police Station

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், முகமது சிராஜ் மைதானத்திலேயே அழுதார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி, இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று  மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இது தொடர்பாக ஆஸ்திரேலிய  மிட்செல் மார்ஷ் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பண்டிட் கேசவ் என்பவர், உலகக் கோப்பையை அவமதிக்கும் வகையில் மிட்செல் மார்ஷ் பதிவிட்ட புகைப்படம் 140 கோடி இந்திய மக்களை புண்படுத்தியுள்ளது. அதனால் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் இந்திய மண்ணில் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்க வேண்டும் என்று அலிகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“பாவிகள் கலந்துகொண்டதால் இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது” - மம்தா பானர்ஜி

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Mamata Banerjee says Indian cricket team failed because of sinners

 

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பல்வேறு வழக்குகளில் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து தனது கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், தேர்தலுக்குப் பிறகு விசாரணை அமைப்புகள் பா.ஜ.கவை குறி வைக்கும் என்று கூறியுள்ளார்.

 

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இன்னும் 3 மாதங்கள்தான் நீடிக்கும். தற்போது எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைக்கும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள், 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வை குறிவைக்கும். மெட்ரோ ரயில் நிலையங்கள் முதல் கிரிக்கெட் அணி வரை நாடு முழுவதும் காவி மயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றது.

 

காவி என்பது தியாகிகளின் வண்ணம். ஆனால் நீங்கள் பாவிகள். காவி நிறத்தில் உடைகளை அறிமுகப்படுத்தி இந்திய கிரிக்கெட் அணியை காவி மயமாக்க முயற்சி செய்தனர். ஆனால், அதற்கு கிரிக்கெட் அணி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பயிற்சியில் மட்டும் காவி நிற உடை அணிந்துவிட்டு போட்டியில் அணியவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி அகமதாபாத்துக்கு பதிலாக மும்பை அல்லது கொல்கத்தாவில் நடத்தப்பட்டிருந்தால் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும். 

 

ஆனால், இவர்கள் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அகமதாபாத் மைதானத்தில் ஆட்டத்தை நடத்தினார்கள். அதனால்தான் இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது. பாவிகள் எங்கு சென்றாலும், தங்கள் பாவங்களை எடுத்துச் செல்கிறார்கள். உலகக் கோப்பையில் பாவிகள் கலந்துகொண்ட ஒரு போட்டியை தவிர மற்ற எல்லாப் போட்டிகளிலும் இந்திய அணியினர் வெற்றி பெற்றனர். நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீரழித்துவிட்டது” என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்