"நான் நலமாக உள்ளேன்..." அசத்தலாக ஃபீல்டிங் செய்த வீராங்கனை ட்வீட்!

Nattakan Chantam

'நான் நலமாக உள்ளேன்' என மகளிருக்கான டீ20 சேலஞ்ச் தொடரின் இறுதிப் போட்டியில் அசத்தலான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தியநட்டகன் சந்தம் ட்வீட் செய்துள்ளார்.

மகளிருக்கான டீ20 சேலஞ்ச் தொடரின் இறுதிப்போட்டி. நேற்று இரவு ஷார்ஜாவில் நடைபெற்றது. ட்ரெய்ல் பிளேசர்ஸ், சூப்பர் நோவாஸ் அணிகள் மோதிய இப்போட்டியில், 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணி, சாம்பியன் பட்டம் வென்றது. போட்டியின்போது, எல்லைக்கோட்டை நோக்கிச் சென்ற பந்தை விரட்டிச் சென்ற நட்டகன் சந்தம், அதைப் பாய்ந்து தடுத்தார். சமூக வலைதளங்களில், வைரலாகிய அந்தக் காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள், நட்டகன் சந்தமை பெண் ஜாண்டிரோட்ஸ் எனப் புகழ்ந்து வந்தனர்.

மேலும் சில நெட்டிசன்கள், ஃபீல்டிங்கின் போது காயம் ஏதும் ஏற்பட்டதா, தோள்பட்டையில் வலி ஏதும் இருக்கிறதா எனக் கேள்வியெழுப்பினர். இந்நிலையில், இது குறித்து நட்டகன் சந்தம் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் நலமாக உள்ளேன். எந்த வலியும் இல்லை. இது குறித்து கேள்வியெழுப்பியவர்கள் அனைவருக்கும் நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

womens cricket
இதையும் படியுங்கள்
Subscribe