Nattakan Chantam

Advertisment

மகளிருக்கான டீ20 சேலஞ்ச் தொடரின் இறுதிப்போட்டியில் ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணி வீராங்கனை நட்டகன் சந்தமின் அபார ஃபீல்டிங்கை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், அவரை பெண் ஜாண்டிரோட்ஸ் எனப் பாராட்டி வருகின்றனர்.

மகளிருக்கான டீ20 சேலஞ்ச் தொடரின் இறுதிப்போட்டி நேற்று இரவு ஷார்ஜாவில் நடைபெற்றது. ட்ரெய்ல் பிளேசர்ஸ், சூப்பர் நோவாஸ் அணிகள் மோதிய இப்போட்டியில், 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டியின்போது, எல்லைக்கோட்டை நோக்கி சென்ற பந்தை விரட்டிச் சென்ற நட்டகன் சந்தம், அதைப் பாய்ந்து தடுத்தார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் நட்டகன் சந்தமை பெண் ஜாண்டிரோட்ஸ் எனப் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

நட்டகன் சந்தமின் ஃபீல்டிங்கை பார்த்து, வெளியே அமர்ந்திருந்த எதிரணி வீரர்களும் கைதட்டிப் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.