Advertisment

சதம் அடித்த லபுஷேன்... விக்கெட் வீழ்த்திய நடராஜன்..!

Natrajan took his first wicket in international test

Advertisment

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இதில் தமிழக வீரர் நடராஜன் களமிறங்கியுள்ளார். இந்த போட்டியில் அவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அபாரமாக பந்துவீசிய நடராஜன், ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட் மற்றும் லபுஷேன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக லபுஷேன் (108) சதம் அடித்திருந்த நிலையில் அவரது விக்கெட்டை நடராஜன் வீழ்த்தியுள்ளார்.

Australia India Natarajan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe