natarajan

1992-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைத் தொடரின்போது இந்திய வீரர்கள் பயன்படுத்திய ஜெர்சியை தமிழக வீரர் நடராஜன் அணிந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.

Advertisment

அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இத்தொடருக்காக, தயாராகி வரும் இவர் சிட்னியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நடராஜன், 1992-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைத் தொடரின்போது இந்திய வீரர்கள் பயன்படுத்திய ஜெர்சியை அணிந்து சில புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதில் 'சிறப்பு வாய்ந்த இந்த ஜெர்சியை அணியும்போது சிறப்பாக உணர்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் நடராஜனுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய அணி இதே ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment