Skip to main content

"கனவுகள் மெய்ப்படும்"  - சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் நடராஜன்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

t natarajan

 

தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியதன் காரணமாக இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியிலும் சிறப்பான பந்து வீசிய நடராஜனின் வெற்றி தமிழகத்தையே உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனால் தற்போது காயம் காரணமாக நடராஜன், இந்திய அணியில் இடம்பெற முடியாமல் இருந்து வருகிறார்.

 

இந்தநிலையில் அவர், தனது சொந்த ஊரில் சகல வசதிகளுடனும் கூடிய ஒரு கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருகிறார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கிரிக்கெட் மைதானத்தை அமைக்கிறேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கு நடராஜன் கிரிக்கெட் மைதானம் (NCG) என பெயர் சூட்டப்படும். கனவுகள் மெய்ப்படும். கடந்த ஆண்டு டிசம்பரில் நான் இந்திய அணியில் அறிமுகமானேன், இந்த ஆண்டு (டிசம்பர்) கிரிக்கெட் மைதானத்தை அமைக்கிறேன். கடவுளுக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

 


 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

கிரிக்கெட் வீரர் நடராஜன் பயோ-பிக்கில் சிவகார்த்திகேயன்

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

Sivakarthikeyan in the indian cricketer Natarajan bio-pic

 

சிவகார்த்திகேயன் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து மண்டேலா இயக்குநர் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்திலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

 

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்தை பற்றிய தகவல் வெளியாகவுள்ளது. பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் அதில் நடராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிவகார்த்திகேயனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான 'கனா' படத்தை தயாரித்து அதில் கிரிக்கெட் பயிற்சியாளராக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன் தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது கவனத்தை ஈர்த்தார். பின்பு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்றார். அங்கு நடந்த ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.