தமிழகத்தைச் சேர்ந்தகிரிக்கெட்வீரர்நடராஜன் ஐபிஎல் தொடரில்சிறப்பாக விளையாடியதால், இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு நெட்பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் ஒருநாள்போட்டிக்கான அணியில் இடம்பெற்றார். அதில் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இருபது ஓவர்போட்டிகளுக்கான அணியிலும் சேர்க்கப்பட்டார்.
இருபது ஓவர்போட்டியிலும்சிறப்பாக பந்து வீசி ரசிகர்கள், கிரிக்கெட்விமர்சகர்கள் என அனைவரின் பாராட்டையும்பெற்றார் நடராஜன். முன்னதாக இந்தியடெஸ்ட் அணியில்இடம்பெறாத நடராஜன், காயம் காரணமாகஉமேஷ்யாதவ்தொடரிலிருந்து விலகியதால், அவருக்குப் பதிலாக தற்போது நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடராஜன், இந்தியஅணியின்டெஸ்ட்ஜெர்சியை அணிந்துபுகைப்படம் ஒன்றை தனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்அவர், "இந்திய அணியின்வெள்ளை ஜெர்சியை அணிவதுபெருமையான தருணம். அடுத்தகட்ட சவால்களுக்குத் தயார்" என்று கூறியுள்ளார்.
நடராஜனின் பதிவினைத் தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெஸ்ட் ஜெர்சியில் இருக்கும் அவரின் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.