இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்குஇடையேயான இருபது ஓவர்போட்டித்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. முதலாவதுஇருபது போட்டியில்இந்தியஅணி வெற்றபெற்ற நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், ஹர்திக் பாண்டியாவின்அதிரடியால் இந்தியவென்றதோடு, தொடரையும்கைப்பற்றியது.
இப்போட்டியில், மற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களைவாரி வழங்கியபோது, நடராஜன் 4 ஓவர்கள்வீசி 20 ரன்கள்மட்டுமேகொடுத்து2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதுபெற்றஹர்திக்பாண்டியா, இந்த விருதை நடராஜன் தான் பெறுவார்எனநினைத்ததாககுறிப்பிட்டார்.
நடராஜன்அறிமுகமான முதல் தொடரிலேயே, இந்தியஅணி அத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இவ்வெற்றியைத் தொடர்ந்து, நடராஜன்ட்விட்டர் பக்கத்தில்,தனதுமகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுத்தொடர்பாக அவர், "எனதுநாட்டிற்காக முதல் 'சீரிஸ்' வெற்றி. மறக்கமுடியாதமற்றும் ஸ்பெஷலான ஒன்று" எனக்கூறியுள்ளார்.