Natarajan

Advertisment

தமிழக வீரரான நடராஜன் அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். தனது அபாரமான மற்றும் துல்லியமான பந்துவீச்சு மூலம் ரசிகர்கள் மட்டுமின்றி தேர்வுக்குழுவினரின் கவனத்தையும் ஈர்த்த நடராஜனுக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 20 ஓவர் அணியில் இடம் கிடைத்தது. இத்தொடருக்காக இந்திய வீரர்களோடு இணைந்து ஆஸ்திரேலிய சென்ற அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையான முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் ஆடும் அணியில் இடம்பெறாத நிலையில், அடுத்து வரவிருக்கிற இரு போட்டிகளில் நடராஜனுக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.