Skip to main content

முத்தையா முரளிதரன் டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவமனை அறிவிப்பு!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

muttiah muralithran

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்து வீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன், தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் தனது பிறந்தநாளை கடந்த 17ஆம் தேதி கொண்டாடிய நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று (18.04.2021) அனுமதிக்கப்பட்டார். இதயம் சம்பந்தமான சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

 

இந்தநிலையில், அங்கு அவருக்கு அஞ்சியோ சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதனை அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது. அஞ்சியோ சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து, முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். டிஸ்சார்ஜ்க்குப் பிறகு முரளிதரன் தனது வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் எனவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

 

Next Story

பிரதமர் மோடியின் சகோதரர் அப்போலோவில் அனுமதி

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

 PM Modi's brother is allowed in Apollo

 

பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பத்தார் ஆறு பேருடன் பெங்களூர் வந்திருந்த பொழுது பந்திப்பூர் வனவியல் பூங்கா அருகே அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அனைவரும் சிறு காயங்களுடன் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

Next Story

''ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான்''-அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்!

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

 

j

 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (07/03/2022) மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் நேற்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகினர். அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

 

விசாரணையில் மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு பதவியேற்பதற்கு முன்பே அவருக்கு தலைச்சுற்றல், மயக்கம் இருந்ததாகவும், சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, உடற்பயிற்சிக்கும் பரிந்துரைத்ததாக மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது. இன்று அப்பல்லோ மருத்துவர்கள் மதன்குமார், ரவிச்சந்திரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் ஆஜராகினர். மதன்குமாரிடம் நடைபெற்ற விசாரணையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். அதில், ஜெயலலிதாவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம்  தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்புதான். மாரடைப்பு ஏற்பட்டதும் ஜெயலலிதாவை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டோம் என மதன்குமார் தெரிவித்துள்ளார்.