
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்து வீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன், தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் தனது பிறந்தநாளை கடந்த 17ஆம் தேதி கொண்டாடிய நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று (18.04.2021) அனுமதிக்கப்பட்டார். இதயம் சம்பந்தமான சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில், அங்கு அவருக்கு அஞ்சியோ சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதனை அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது. அஞ்சியோ சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததைதொடர்ந்து, முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். டிஸ்சார்ஜ்க்குப் பிறகு முரளிதரன் தனது வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் எனவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)