Advertisment

தோனியை பற்றி மனம் திறந்த முத்தையா முரளிதரன்....!

muttiah muralitharan

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்தும், அவரது அணித்தலைமை குறித்தும் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

Advertisment

இந்திய அணி வீரர் அஷ்வின் உடன் நடந்த கலந்துரையாடலில் அவர் பேசும் போது, பந்து சிக்ஸருக்கு போனால் கூட தோனி பந்து வீச்சாளர்களைப்பாராட்டுவார். நீங்கள் வீசியது சிறந்த பந்துதான், பேட்ஸ்மேன் திறமையானவர் அதனால் அடித்து விட்டார் என்பார். மற்ற வீரர்களின் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்பார். எப்போதும் களத்தில் நிதானமாகவே இருப்பார். மற்றவர்கள் கருத்துகளைக் கேட்டாலும் அவர் முடிவெடுப்பதில் மிகவும் உறுதியாக இருப்பார். அது தான் ஒரு சிறந்த கேப்டனுக்கான பண்பு என்று நினைக்கிறேன்.

Advertisment

முத்தையா முரளிதரன் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe