Advertisment

தோனி மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த முரளி கார்த்திக்!

Dhoni

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணியில் இடம்பெற்றுள்ளார்.

Advertisment

சமீபகாலமாக அவரது ஆட்டங்களில் வேகம் குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழும்போது, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக களத்தில் அதிரடி காட்டுவார் தோனி. உலகக்கோப்பை நடக்கவிருக்கும் சூழலில் அவர் இந்திய அணியில் இருந்து ஓய்வுபெற்று, மற்ற வீரர்களுக்கு இடம் தரவேண்டும் என்ற கருத்து நிலவியபோது, ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக ஆடி தன்னை அணியில் நீட்டித்துக் கொண்டார். 2019 உலகக்கோப்பை வரை இந்திய அணியில் நீடிப்பேன் என அவர் உறுதியளித்துள்ளார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்நிலையில், இங்கிலாந்து தொடரின் இரண்டாவது போட்டியில் தோனி மெதுவாக விளையாடியதாக விமர்சனங்கள் எழுந்தன. பலர் அவர் ஓய்வுபெற வேண்டும் என மீண்டும் கருத்துகளை முன்வைத்தனர்.

இந்தக் கருத்துகளுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக், ‘எல்லோரும் தோனி குறித்து விமர்சனங்களைப் பதிவிட்டு வருகிறீர்கள். அவர் ரசிகர்களுக்காக விளையாடாமல், தான்சார்ந்த அணிக்காக விளையாடுவதால் ரன்ரேட் எந்த நிலையில் இருந்தாலும் அவர்மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மலைபோல் இருக்கும்’ என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

sports indian cricket MS Dhoni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe