Advertisment

மும்பை அணியில் பொல்லார்ட் படைத்த சாதனை!

Pollard

மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் 150 போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் பொல்லார்ட் படைத்துள்ளார்.

Advertisment

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் பொல்லார்ட், ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணி ஒவ்வொரு முறையும் ஏலத்தின்போது தக்க வைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலில், பொல்லார்ட் பெயரும் இடம் பெறும். பல போட்டிகளில் தன்னுடைய அதிரடியான ஆட்டம் மற்றும் துடிப்பான ஃபீல்டிங் மூலம் இறுதிக்கட்டத்தில் முடிவுகளையேமாற்றியுள்ளார். நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடியதன் மூலம், மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் 150 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Advertisment

2010 ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வரும் பொல்லார்ட், இதுவரை மொத்தம் 172 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 22 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளும் அடக்கம். மும்பை அணியின் நடப்புக் கேப்டனான ரோகித் ஷர்மா, மும்பை அணிக்காக மொத்தம் 154 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

mumbaiindians
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe